Monday, January 31, 2022

கூந்தல் நறுமணம் -குறுந்தொகை

மண்டபத்தில் தருமிக்குப் பொற்கிழி வாங்கித் தர இறையனார் எழுதிக் கொடுத்த குறுந்தொகைப் பாடல் எனது வரிகளில்…ஆமா…ஆமா… திருவிளையாடல் படத்தில் வந்த அந்தக் காட்சியே தான்

🙂
என் சொற்களில்:
அழகிய சிறகுகளை அகத்தேக்கொண்ட வண்டே
பூவின் மகரந்தத்தை ஆராய்ந்துண்டு வாழும் - நீ
என்நிலத்தில் வாழும் வண்டு என்பதால்
என்மனம் கேட்க விரும்பியதைக் கூறாமல்
உன் கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறு…
மென்மையில் மயில் போலவும்
நெருங்கிய பற்களையும்
ஏழு பிறப்பிலும் என்னோடு நட்புப் பொருந்திய
என் தலைவியின் கூந்தல் நறுமணம்
நீ அறியும் மலர்களுள் உண்டோ?
குறுந்தொகைப் பாடல்:
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
இறையனார்

No comments:

Post a Comment

சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...