வாழ்வின் கெட்ட நிலை வந்தால் உயர்ந்த குணமுடையவர் எப்படி இருப்பர்?
இதோ … ஒளவையார்-மூதுரை
கெட்ட நிலையடைந்தாலும் உயர்ந்த குணமுடையவர்
மேன்மை குணத்தோடு இருப்பர்
பொன்னாலான குடம் உடைந்தாலும்
பொன் பயன் தருவதைப் போல்.
மண்ணாலான குடம் உடைந்தால்
பயனற்றது போல்தான் கீழ்மை குணமுடையவர்.
வெண்பா : 17
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?
கருத்து:
கெட்டாலும் உயர்ந்த குணமடையவர் என்றும் மேன்மை குணத்தோடு இருப்பர்.
Picture Credit: Google