நீவி விட்டாற்போல் சுருக்கம் இல்லாத முகம், அழகுக் கறுப்பு என்று வர்ணிக்கப்படும் தங்கம் அத்தையைப் பற்றிய கதை. ‘பூக்காத’, பூரணமடையாத தங்கம் அத்தையின் வாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது இந்தக் கதை. இக்கதைக்குள் கதையை வைத்து, கதை சொல்லியாக தங்கம் அத்தை மான் கதையைச் சொல்லி அந்த படிமத்தின் மூலம் தன் வாழ்வையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறாள். அத்தையின் உடம்பில் ஏற்றாத மருந்தில்லை, வேப்பிலை பூசைகள், திடீரெனப் பயந்தால் முன்னேற்றம் இருக்குமென இரவில் பயமேற்றி விழுந்த காயங்கள், கணவரின் மறு கல்யாணம் பேச்சைக் கேட்டு தற்கொலை செய்ய முயன்று பின் தானே பெண் பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தது என்றிருந்தது அவள் வாழ்வு.
Tuesday, March 11, 2025
காட்டில் ஒரு மான் - அம்பை
கதைசொல்லியான அத்தை குழந்தைகளுக்குக் காட்டில் ஒரு மான் என்ற கதை சொல்கிறாள். நன்றாகப் பழகிப் போன காட்டிலிருந்து தண்ணீர் தேடி அதன் வழியே தடம் மாறி புது காட்டிற்குச் சென்றது அந்த மான். எல்லாக்காடுகள் மாதிரியும் பழைய காட்டிலும் வேடன் அம்பு விடுவது, காட்டுத் தீ போன்ற வாழ்வாதாரப் பயமும் சிக்கலும் இருந்தாலும், புதுக் காட்டில் அது மட்டுமே தெரிந்தது அந்த மானுக்கு. பல நாட்கள் பயத்திலிருந்த மான், பின்னர் ஒரு நாளில் அந்தக் காட்டின் பயம் மறந்து, காட்டின் ரகசியம் அறிந்து சாந்தமாகச் சுத்த ஆரம்பித்தது என்று கூறி முடிக்கிறாள் தங்கம் அத்தை. கதை சொல்லி முடித்துவிட்டு, குழந்தைகள் உறங்க, நடு இரவில் முட்டியின் மேல் குத்தி அமர்ந்திருக்கிறாள். இந்தப் படிமத்தின் வழியே தனக்கான வாழ்வை ஏற்று அமைதியாக வாழ்கிறாள் என்பது புலப்படுகிறது.
பௌர்ணமி நிலா வெளிச்சத்தைப் பூசிக் கொண்ட அருவியைப் பார்த்து பயம் போனது, தங்கத்தின் கைவிரல்கள் கறுத்தப் பட்டாம்பூச்சிகளைப் போன்று ஆர்மோனியப் பெட்டியின் மேல் பறக்கும் போன்ற உவமைகள் நிறைந்த இந்தக் கதை ஒரு கவிதை வாசிப்பது போல் இருந்தது. சின்ன வயதில் யாரவது கதை சொல்லிக் கேட்ட நினைவைக் கொண்டு வருகிறது. பூக்காதப் பெண்ணிடம் ஊரே அன்பைப் பெறுவது, அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமாகக் காட்டப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்
ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...
-
1987 ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது பெற்ற ஆதவன் அவர்களின் ‘ஒரு அறையில் இரு நாற்காலிகள்’ சிறுகதை நட்பின் உளவியலை ஆழமாக ஆராய்கிறது. மன உளைச்...
-
ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...
-
நீவி விட்டாற்போல் சுருக்கம் இல்லாத முகம், அழகுக் கறுப்பு என்று வர்ணிக்கப்படும் தங்கம் அத்தையைப் பற்றிய கதை. ‘பூக்காத’, பூரணமடையாத தங்கம் அத்...

No comments:
Post a Comment